×

வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் நிலம் கையகப்படுத்துதல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பிரசாரம்

சென்னை: வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் நிலம் கையகப்படுத்துதல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தேன் என கூறி தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பிரசாரம் மேற்கொண்டார். தென்சென்னை அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் இன்று மயிலாப்பூர் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது ஜெயவர்தன் பேசியதாவது:
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது 2005ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த நிலம் கையகப்படுத்துதல் பிரச்னையினால் வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் திட்டம் நிலுவையில் இருந்தது. அதை முடிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசாங்கத்தின் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தின் வாயிலாக அந்த நிலம் கையகப்படுத்துகிற பிரச்னையை முடிவு கொண்டு வரப்பட்டது.

அதிலும், நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத போது 2019ம் ஆண்டு ஜூலை மாதம் அட்வகேட் ஜெனரலிடமிருந்து நிலம் உரிமையாளர்களுக்கு இழப்பீடு அதிகமாக இருக்கிறது. எனவே உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்ற அறிவுரை தமிழக அரசுக்கு வரும்போது நான் அதை ஏற்றுக் கொள்ளகூடாது என்பதற்காக நில நிர்வாக ஆணையரை சந்தித்து, உச்சநீதிமன்றத்தை நாடுவதை தவிர்த்தேன். நிலம் கையகப்படுத்துகிற பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

 

The post வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் நிலம் கையகப்படுத்துதல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Velachery-St Thomas Mount ,South Chennai AIADMK ,Jayavardhan Prasaram ,CHENNAI ,Jayavardhan ,Dr. ,J. Jayavardhan ,Mylapore ,Jayavardhan… ,Dinakaran ,
× RELATED வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில்...