×

அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி ரகசியமாக செலவிடப்படுவதாக செல்வப்பெருந்தகை கண்டனம்..!!

சென்னை: அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி ரகசியமாக செலவிடப்படுவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

பி.எம்.கேர்ஸ் நிதி எதற்காக தொடங்கப்பட்டது?: காங். செல்வப்பெருந்தகை
பி.எம்.கேர்ஸ் நிதி எதற்காக தொடங்கப்பட்டது? யாருக்காக தொடங்கப்பட்டது? நன்கொடை வழங்கியவர்கள் யார்?. தேர்தல் பத்திரம் போன்று பி.எம்.கேர்ஸ் மூலம் ரூ.12,700 கோடியை பிரதமர் பெற்றது மறைக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் ஒரு பிரதமரே முறைகேடாக பணம் வசூலித்த மிகப்பெரிய மோசடி அம்பலமாகி உள்ளது. சீன நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடை பெற்றது தற்போது வெளிவந்துள்ளது. இத்தகைய நிதிகளை பிரதமர் மோடி எப்படி பெற்றார் என்பதற்கு உரிய விளக்கத்தை அவர் தர வேண்டும்.

பிரதமரே மிகப்பெரிய நிதியை எப்படி திரட்ட முடியும்?: காங். செல்வப்பெருந்தகை
நாடாளுமன்ற அனுமதி இன்றி எவ்வித சட்ட ஒப்புதலுமின்றி பிரதமர் இவ்வளவு பெரிய அளவில் எப்படி நிதி திரட்ட முடியும்?. அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி ரகசியமாக செலவிடப்படுவதாக செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். பி.எம்.கேர்ஸ் நிதியை பொறுத்தவரையில் நாம் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க. தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
பிரதமர் மோடியின் ஊழலுக்கு உரிய படிப்பினையை வரும் தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

The post அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி ரகசியமாக செலவிடப்படுவதாக செல்வப்பெருந்தகை கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Congress Committee ,President ,Selvaperunthagai ,Selvaperundagai ,Selupuruthaki ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி மீது நடவடிக்கை...