×

அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது: தொடக்க கல்வி இயக்குனர் விளக்கம்

சென்னை: அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது என்று தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கு 19 நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு என தகவல் வெளியானது. சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுக்கு எதிராக போராட்டதில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யவில்லை என்றும் தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம் கல்விமாவட்டம் , வடமதுரை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு தகவலின்றி பணிக்கு வருகை புரியாத நாள்களை ஈட்டிய விடுப்பாக அனுமதிக்க தெளிவுரை வேண்டி கருத்துரு பெறப்பட்டுள்ளது. கருத்துரு பரிசீலனை செய்யப்பட்டது. மருத்துவ விடுப்பு தவிர பிற விடுப்புகள் அனுமதிக்கக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை தற்போதைய நிலையில் ஏற்க இயலாது என வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ( 19.02.2024 முதல் 08.03.2024 வரை ) கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் மேலும் 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகள் ஊதியத்தில் ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது . எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற கடிதங்கள் , தெளிவுரைகள் கேட்பதை தவிர்க்குமாறு வடமதுரை வட்டாரக் கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது .

இந்நிலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது என்று தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கு 19 நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு என தகவல் வெளியான நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

The post அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது: தொடக்க கல்வி இயக்குனர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Director of Elementary Education ,Chennai ,Kannappan ,North Madurai Union ,Dindigul District ,Director of ,Elementary ,Education ,Dinakaran ,
× RELATED தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல்