×

கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர் : கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் அமராவதி துணை வாய்க்கால் சுக்காலியூர் பகுதியில் செல்கிறது. இந்த துணை வாய்க்கால் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தென்னை கரும்பு நெல் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது முறையாக ஆர்ஓ சிஸ்டம் மூலமே சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன.

ஆனால் இப்போது கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு அனுமதி பெறாமல் சாயபட்டறைகள் இல்லை.இருப்பினும் பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் குவிக்கப்பட்டு மாசுபட்ட வாய்க்கால் அல்லது பாசன வாய்க்கால் என்று பொதுமக்களுக்கு விவசாயிகளுக்கும் சந்தேகம் ஏற்படும் நிலையில் அமைந்துள்ளது .

குறிப்பாக திருமாநிலையூர் அருகில் உள்ள வாய்க்கால் பகுதியில் சுமார் ஒரு டன் அளவிற்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு மண்ணோடு மண்ணாக கலந்துள்ளது.
எனவே சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி வாய்க்காலை தூர் வரவேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது வாய்க்கால் மோசமான நிலையில் இருப்பதால் விவசாயிகள் இப்பகுதியில் சாகுபடி செய்வதை கடுமையாக குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur Sukkaliyur ,Karur ,Sukkaliyur ,Karur Amaravati ,Dinakaran ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு