×
Saravana Stores

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை

*15 கூடுதல் லட்டு கவுன்டர்கள் அமைப்பு

செயல் அதிகாரி தர்மா தகவல்

திருமலை : திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் டயல் யுவர் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோடை விடுமுறையில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதலாக 15 கவுன்டர்கள் அமைத்து பக்தர்கள் நேரம் குறைக்கப்படும் என்று செயல் அதிகாரி தர்மா தெரிவித்தார். திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இருந்தபடி போனில் பக்தர்களிடம் குறைகள் ஆலோசனைகள் கேட்கும் டயல் யூவர் இ.ஒ.நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் இருந்து ஏழுமலையான் கோயிலுக்கு வரும் 29 பக்தர்கள் பல்வேறு கருத்துகள் ஆலோசனைகள் வழங்கினர். இதில் பக்தர்: நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக பல பக்தர்கள் திருமலையில் நள்ளிரவில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் மலையில் தங்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே திருமலையிலிருந்து திருப்பதிக்கு கடைசி பேருந்து சேவையை மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்குமாறு கேட்டு கொண்டார்.

செயல் அதிகாரி: திருப்பதி மலைப்பாதை சாலைகள் வன விலங்குகள் காப்பகத்தின் கீழ் வருகிறது. மேலும் வன விதிகளின்படி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நேர கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் பல வன விலங்குகள் சாலையை கடந்து செல்லும். இருப்பினும், அதிக கூட்ட நெரிசல் மற்றும் விசேஷ உற்சவ நாட்களில், திருமலையில் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 24 மணி நேரமும் மலைப்பாதை சாலை திறந்து வைக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

பக்தர்: கோயிலில் நடைபெறும் சேவைகளுக்கான ஆப்லைன் லக்கி டிப் ( குலுக்கலில் ) பதிவு செய்தால் அதற்கான மெசேஜ் சரியாக மொபைலுக்கு வரவில்லை. செயல் அதிகாரி: செல்போன் நெட்வோர்க் சரியாக வேலை செய்யாவிட்டால் மொபைல் சிக்னல் காரணமாக சில பக்தர்களுக்கு வராமல் இருக்கலாம். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். இந்த தவிர்க்க அனைத்து மொபைல் நிறுவனங்களின் சிக்னல் திறனை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பக்தர்: கோவிட் தொற்றுநோய்க்கு முன்னர் இருந்தது போன்று சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் வைகுண்டம் காம்பளக்ஸ் அறைகளில் அன்னப்பிரசாதம் விநியோகத்தை மீண்டும் தொடங்க வேண்டும். செயல் அதிகாரி: கோவிட்க்குப் பிறகு அனைத்து சேவைகளையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நன்கொடையாளர் மூலம் திருமலையில் 120 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திருமலையில் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்: மாநிலத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலை புனரமைக்க வேண்டும். செயல் அதிகாரி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிர்மனா அறக்கட்டளையின் (வானி) நிதியில் கோயிலை கட்டவும் அல்லது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்தின் அதிகாரிகள் குழு கோயிலுக்குச் சென்று சாத்தியக்கூறுகளை பார்த்த வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

பக்தர்: ஸ்ரீ காந்த் எனும் தங்கள் பகுதியில் கோயில் கட்ட விண்ணப்பித்துள்ளேன். தங்கள் மனு மீதான நிலவரம் என்ன?

செயல் அதிகாரி: கடந்த மூன்று ஆண்டுகளில், 3600க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டப்பட்டு வருகிறது. அதில் 1700 கோயில்கள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளன, மற்றவை பல்வேறு கட்டத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் வருகிறது. முழுமையான சரிபார்ப்புக்குப் பின்னரே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். பக்தர்: தரிசனத்திற்கான நேரத்தை போன்று லட்டு பிரசாதம் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

செயல் அதிகாரி: தற்போது கிட்டத்தட்ட 60 கவுன்டர்கள் மூலம் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் அதனை அதிகரிக்கப்படும். கோடை விடுமுறையில் மேலும் 15 கூடுதல் கவுண்டர் அமைத்து காத்திருக்கும் நேரம் விரைவில் தீர்க்கப்படும். பக்தர்: லக்கி டிப்பின் கீழ் விஐபி பிரேக் தரிசனத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

செயல்அதிகாரி: இதுகுறித்த சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்படும். கோடை கால நெரிசலைக் கருத்தில் கொண்டும் தேர்தல் நிபந்தனைகள் காரணமாக அரசியல் ரீதியான பிரதிநிதிகளுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மற்றும் புரோட்டக்கால் படி அவர்களே வந்தால் வழங்கப்படுகிறது. திருப்பதியில் வழங்கப்படும் (இலவச தரிசனம்) நேர ஒதுக்கீடு டோக்கன்களை 30 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். கோடை விடுமுறையின் போது இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக நேரம் அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமை என்று அவர் தெரித்தார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை appeared first on Dinakaran.

Tags : Tirupati Eyumalayan Temple ,Dharma Information ,Tirumala ,Tirupati Devasthanam ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத உற்சவங்கள் அறிவிப்பு