×

85 வயதுக்கு மேற்பட்ட முதியவர், மாற்றுத்திறனாளிகளிடம் வீடியோ ஆதாரத்துடன் வாக்குப்பதிவு

*1331 வாக்காளர்கள் வாக்கு செலுத்தினர்

*மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு

கரூர் : 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர், மாற்று திறனாளிகளிடம் வீடியோ பதிவுடன் ஓட்டு பதிவு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதுவரை 1331 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். வாக்கு பதிவு பணியை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் தங்கவேல் நேரில் ஆய்வு செய்தார்.கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 4ம் தேதி மற்றும் நேற்று (5ம் தேதி) ஆகிய இரண்டு நாட்களிலும் விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்குற்கு மேற்பட்ட வாக்காளர்கள் (AVSC) மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் (AVPD) வாக்களிக்க ஏதுவாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 56 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அஞ்சல் வாக்குகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று தகுதியான விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளர்களிடம் வாக்குகளை பதிவு செய்து பின் அவர்களின் வாக்குகளை பாதுகாப்புடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தபால் வாக்குகள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று மூடி முத்தரையிடப்படுகிறது. தொடர்ந்து காவல்த்துறை மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் சிசிடிவி கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதை ன்னிட்டு கரூர் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல், கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுத்திருக்காம்புலியூர் பகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை பார்வையிட்டு அதே பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் அனைத்து விதிமுறைகளும் கடைபித்து வாக்களிப்பதை பார்வையிட்டார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்குற்கு மேற்பட்ட வாக்காளர்கள் (AVSC) 1804-ம், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் (AVPD) 1429-ம் என மொத்தம் 3233 வாக்காளர்கள் வீட்டிலிருந்து படிவம் 12டி மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் நேற்று 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளார்கள் 721 நபர்களும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 610 நபர்களும் என மொத்தம் 1331 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இந்நிகழ்ச்சியின் போது கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் உடனிருந்தார்.

The post 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர், மாற்றுத்திறனாளிகளிடம் வீடியோ ஆதாரத்துடன் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : District Election Officer ,Karur ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...