×

பறக்கும்படை சோதனையில் ₹1.63 கோடி ரொக்கம் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஏப்.6: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ₹1.63 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க, இந்திய தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, உரிய ஆவணங்களின்றி ₹50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்பவர்களிடமிருந்து பறிமுதல் செய்ய, பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், பறக்கும்படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் ₹8.71 லட்சம், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் ₹30.08 லட்சம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் ₹10.24 லட்சம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் ₹30.78 லட்சம், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் ₹44.43 லட்சம், தளி சட்டமன்ற தொகுதியில் ₹38.51 லட்சம் என மொத்தம் ₹1 கோடியே 62 லட்சத்து 76,980 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பறக்கும்படை சோதனையில் ₹1.63 கோடி ரொக்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Flying Squad ,Fixed Vigilance Teams ,Election Commission of India ,
× RELATED அதிமுக, பாஜவினரிடம் ₹1.76 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி