×

திருப்பதியில் பாதுகாவலர் இல்லாத ஏடிஎம் மையங்களை குறிவைத்து ரூ.7 லட்சம் திருட்டு: 2 வடமாநில கொள்ளையர்கள் கைது

ஆந்திரா: திருப்பதியில் பாதுகாவலர் இல்லாத ஏடிஎம் மையங்களை குறிவைத்து கள்ளசாவி உதவியுடன் நூதன மோசடி செய்து சுமார் 7 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்த 2 வடமாநில இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பதி கிழக்கு காவல் நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 2 வடமாநில இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருப்பதி சுற்றுவட்டாரங்களில் பாதுகாவலர்கள் இல்லாத, கண்காணிப்பு கேமரா செயல்படாத ஏடிஎம் மையங்களை குறிவைத்து கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அதாவது ஏடிஎம் மையங்களில் கார்டுகளை சுவைப் செய்து பணம் வெளியே வந்ததும் கள்ளச்சாவி மூலம் எந்திரத்தை திறந்து கொள்ளையர்கள் தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்துகின்றனர். பின்னர் வங்கியின் உதவி எண்ணுக்கு புகார் அளித்து பணம் எடுக்காமலேயே ரசீது வந்துவிட்டதாக கூறி அவர்கள் நாடகமாடி மோசடி செய்திருக்கிறார்கள். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இதேபோல் நூதன முறையில் மோசடி செய்து பல ஏடிஎம் மையங்கள் மூலம் 6 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை அவர்கள் திருடியுள்ளனர். இதனையடுத்து இதுபோன்ற புகார்கள் வந்தால் விழுப்புடன் இருக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஏடிஎம் கொள்ளை தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், 2 பேர் சிக்கியுள்ளனர். பிடிபட்ட அரிப் கான், சலீம் கான் இருவரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் இக்கொள்ளையில் தொடர்புடைய ரோஹித் உசேன், இலியாஸ், அக்ருதீன் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர். …

The post திருப்பதியில் பாதுகாவலர் இல்லாத ஏடிஎம் மையங்களை குறிவைத்து ரூ.7 லட்சம் திருட்டு: 2 வடமாநில கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Tiruppati ,Andhra Pradesh ,Nudana ,Tirupati ,North ,State ,Dinakaran ,
× RELATED போலி ஆதார் கார்டு தயாரித்து...