×

டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

மதுரை, ஏப். 6: மதுரை, சிம்மக்கல் பகுதியில் உள்ள செல்லத்தம்மன் கோயில் தெருவில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த, திடீர் நகர் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்தனர். இதையடுத்து டிரான்ஸ்பார்மரை பழுதுபார்க்கும் பணிகளை மின்வாரியத்தினர் துவக்கினர்.

The post டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chelathamman Koil Street ,Simmakkal, Madurai ,fire ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை