×

திமுக வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து

சென்னை: நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜ பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள். நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை. அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி’’ என்று கூறியுள்ளார்.

The post திமுக வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து appeared first on Dinakaran.

Tags : DMK ,Congress ,Chief Minister ,M. K. Stalin ,Twitter ,CHENNAI ,M.K.Stalin ,Indian ,Tamil Nadu ,AIADMK ,BJP ,
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்