×

அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சி

ஆவடி:நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக களமிறங்குகிறது. அக்கட்சியின் சார்பில் எழும்பூர் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி போட்டியிடுகிறார். இந்நிலையில், ஆவடியில் அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் பணிமனை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் எம்பி வேணுகோபால் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையினை திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் ரஹீம், பி.வி.ரமணா, அமைப்பு செயலாளர் திருவேற்காடு பா.சினிவாசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் பேசியதாவது: வாக்குபதிவு இயந்திரத்தில் 3வது இடத்தில் உள்ள முரசு சின்னம் பட்டனை தட்டும் தட்டில் வாக்குப்பதிவு இயந்திரமே பழுதாக வேண்டும். மேலும் ஒரு விரலை வைத்து முரசு சின்னத்தில் ஓங்கி அடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டு பேசியதால் அங்கிருந்தோர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

The post அதிமுக கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : AIADMK alliance ,Aavadi ,DMD ,Tiruvallur ,Egmore ,MLA Nallathambi ,AIADMK ,Avadi ,Dinakaran ,
× RELATED விருதுநகர் தொகுதியில் மீண்டும்...