×

திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் வழக்கறிஞர் கிரிராஜன் எம்பி தலைமை தாங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

தலைமை செயற்குழு உறுப்பினரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜெ.மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி தொகுதி பார்வையாளர்கள் பி.டி.அரசகுமார், அழகிரி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், துணைத்தலைவர் கதிரவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, ரவி, ரமேஷ் ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், ஆனந்தகுமார், பரிமளம், சத்தியவேலு, சந்திரசேகர், பொன்னுசாமி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூர் செயலாளர்கள் அபிராமி குமரவேல், அறிவழகன் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,MLA ,Oothukottai ,Kummidipoondi Constituency DMK ,Periyapalayam ,Periyapalayam, Tiruvallur District ,Advocate ,Girirajan ,Tiruvallur East… ,
× RELATED திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் யானை...