×

ஓட்டு கேட்க போன இடத்தில் ‘கும்மாங்குத்து’ பாஜ வேட்பாளர் ‘ஜூட்’

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் அஸ்வத்தாமன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த தொகுதியில் போட்டியிட ஆள் கிடைக்காததால், வெளி மாவட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்டவர். எனக்கு மோடியை தெரியும், உபி முதல்வர் யோகியை தெரியும் என்ற பில்டப்புடன் களம் இறங்கிய வேட்பாளர், தற்போது உட்கட்சி சண்டையில் சட்டை கிழிவதால் கதி கலங்கியிருக்கிறார். இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த ஆணாய்பிறந்தான் கிராமத்தில் ஓட்டுக்கேட்டு பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் சென்றுள்ளார். அப்போது, கட்சி நிர்வாகிகளுக்கு முறையாக தகவல் சொல்வதில்லை, கட்சியில் மரியாதை இல்லை என மாவட்ட தலைவரிடம், ஆன்மிக பிரிவு துணைத்தலைவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவரது சட்டையும் கிழிந்திருக்கிறது. அதோடு, தகராறை தடுத்த நகர தலைவரின் முகத்தில் குத்து விழுந்து ரத்தம் கசிந்துள்ளது. ஓட்டு கேட்கப்போன இடத்தில் கோஷ்டி மோதல் வெடித்ததால், ஓட்டு கேட்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்துள்ளார் வேட்பாளர். இதுதொடர்பான பஞ்சாயத்து, கட்சியின் மேலிடம் வரை சென்றிருக்கிறதாம். பாமகவில் இருந்து பாஜகவுக்கு தாவி, திருவண்ணாமலை ெதாகுதியில் சீட் வாங்கியதால், அஸ்வத்தாமனுக்கு ஏற்கனவே கூட்டணி கட்சியான பாமகவின் ஒத்துழைப்பு இல்லையாம். இப்போது, பாஜவிலும் ேகாஷ்டி மோதல் வெடித்திருக்கிறது. எனவே, கிடைக்கிற கொஞ்ச ஓட்டும் வீணாகிபோகுமே என்று கவலையில் இருக்கிறாராம் பாஜ வேட்பாளர்.

The post ஓட்டு கேட்க போன இடத்தில் ‘கும்மாங்குத்து’ பாஜ வேட்பாளர் ‘ஜூட்’ appeared first on Dinakaran.

Tags : Kummanguthu ,BJP ,Jude ,Aswathaman ,Tiruvannamalai ,Kallakurichi district ,Modi ,UP ,Chief Minister ,Yogi ,
× RELATED காலை 10.20 மணி நிலவரம்: தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை