×

கருப்பு கவுனி அரிசி சர்க்கரை பொங்கல்

தேவையான பொருள்கள்:

கருப்பு கவுனி – 1 கப்
பாசிப்பருப்பு – கால் கப்
வெல்லம் – ஒன்றரை கப்
பால் – 2 கப்
உலர் திராட்சை – 30
முந்திரி பருப்பு – 20 -25
தேங்காய் – கால் மூடி
ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்
நெய் – 100 மில்லி
பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை

செய்முறை :

கருப்பு கவுனி அரிசி மற்ற அரிசியைப் போல வேகமாக வேகாது. அதனால் 2-3 மணி நேரத்திற்கு முன்பாகவே அலசி விட்டு ஊற வைத்து விடுங்கள்.பொங்கல் செய்யத் தொடங்கும் முன் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து அதை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு கப் பாலுடன் 5 கப் தண்ணீரும் சேர்த்து (மொத்தம் 7 கப் அளவு) கொதிக்க விடுங்கள்.தண்ணீர் கொதித்த பின் அதில் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து வேக விடுங்கள். அரிசி வேக அதிக நேரம் எடுக்கும். (குக்கராக இருந்தால் குறைந்தது 10 விசில் வைக்க வேண்டும்).அரிசி 60 சதவீதம் வெந்த பிறகு பருப்பை சேர்த்தால் போதும். இல்லாவிடில் பருப்பு முழுமையாகக் குழைந்து விடும். அரிசி, பருப்பு இரண்டும் நன்கு வெந்த பிறகு, அதில் வெல்லப்பாகு அல்லது துருவிய வெல்லத்தைச் சேர்த்து கிளறுங்கள்.நன்கு வெல்லமும் அரிசியும் சேர்ந்து குழைந்து வேக வேண்டும். தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி, பருப்பு நன்கு வெந்து வந்தபின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறுங்கள்.பிறகு அதில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, உலர் திராட்சையைச் சேர்த்து கிளறி விடுங்கள். பின்பு அடுப்பை அணைத்து விட்டு, மீதமுள்ள எல்லா நெய்யையும் சேர்த்து விடுங்கள்.கடைசியாக ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தையும் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது கொஞ்சம பொங்கல் தளர்வாகத் தான் இருக்கும். ஆற ஆற இறுகிப் போய்விடும். சூடாகப் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.வழக்கமான பொங்கலை விட கருப்பு கவுனி அரிசி பொங்கல் மிக சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

The post கருப்பு கவுனி அரிசி சர்க்கரை பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு