×

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு புதுகையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

*எஸ்பி வந்திதா பாண்டே துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை : நாடாளுமன்றத் தேர்தலில் அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் புதுக்கோட்டையில் ஒடிசாவில் இருந்து வருகை தந்துள்ள சிறப்பு ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படையினர், காவல்துறையினர் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தொடங்கி வைத்தார்.
இந்திய நாட்டின் ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளும் அதேபோல் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் பணிக்காக புதுக்கோட்டைக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து சிறப்பு ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் 218 பேர் வருகை தந்துள்ள நிலையில் நேற்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.

உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வலியுறுத்தும் விதத்தில் ஆயுதம் இந்திய துணை ராணுவப் படையினர், தமிழ்நாடு காவல்துறையினர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்தக் கொடி அணிவகுப்பு நிகழ்வை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த கொடி அணிவகுப்பானது புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி அண்ணா சிலை கீழராஜா வீதி பிருந்தாவனம் வடக்கு ராஜ வீதி வழியாக நகர்மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண் டனர்.

The post வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு புதுகையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Flag parade ,Puducherry ,SP ,Vandita Pandey ,Pudukottai ,Odisha ,
× RELATED மது கடத்தியவர்களிடம் லஞ்சம் பெற்ற...