×

தென்கரை வாய்க்கால் புதிய பாலம் கட்டுமான பணி துவங்கியது சேதமடைந்த தற்காலிக பாதையை சீரமைக்க வேண்டும்

*பக்தர்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை : குளித்தலை கடம்பர் கோயில் எதிரே தென்கரை வாய்க்கால் கடந்து செல்லும் வகையில் 1926 ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தால் தென்கரை வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாகத்தான் முசிறி பெரியார் பாலம் கட்டும் காலத்தில் கட்டுமான பொருட்கள் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குளித்தலை சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து ஆடி மாதம் தை மாதம் சித்திரை வைகாசி மாதம் கிராம கோயில்களில் திருவிழாக்கள் நடக்கும் போது, காவிரி நதிக்கரையில் நீராடி கடம்பன் துறையில் இருந்து பால்குடம் தீர்த்த குடம் காவடி எடுத்து இந்த பாலத்தின் வழியாக கடந்து சென்று கடமனேஸ்வரரை வழிபடுவார்கள். பிறகு பல கிலோ மீட்டர் கடந்து கோயிலை சென்றடைந்து சாமிக்கு அபிஷேகம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

கரூர் திருச்சி புறவழிச்சாலை வந்தவுடன் கரூரிலிருந்து திருச்சியில் இருந்தோ வாகனங்கள் குளித்தலை நகருக்குள் வரவேண்டும் என்றால் இந்த கடம்பர் கோயில் எதிரே உள்ள தென்கரை வாய்க்காலை தான் பயன்படுத்தி வந்தனர். அது மட்டுமல்லாது தேர்தல் நேரத்தில் விஐபிகள் வாகனங்கள் வழியாகத்தான் குளித்தலை நகருக்கு வந்து சென்றது. மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக தான் வந்து சென்றது.

இந்நிலையில் இந்த பாலம் நூற்றாண்டை கடந்ததால் வலுவிழந்த நிலையில் இருக்கிறது என பொதுமக்கள் பக்தர்கள் எம்எல்ஏ மாணிக்கத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர். எம்எல்ஏ மாணிக்கம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி குளித்தலை கடம்பவனேஷ்வரர் கோயில் எதிரே உள்ள தென்கரை வாய்க்கால் பாலம் புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் முற்றிலுமாக பாலம் இடிக்கப்பட்டது அதனால் பொதுமக்கள் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். அதனைத் தொடர்ந்து தற்காலிக பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் பேரில் சிமெண்ட் குழாய் பதிக்கப்பட்டு மண்பாதை போடப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது கோடை காலம் என்பதால் வாழை பயிர் தண்ணீர் இன்றி வாடும் நிலையில் உள்ளது என விவசாயிகள் கோரிக்கை வைத்ததின் பெயரில் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அப்போது கடம்பர் கோயிலில் எதிரே தற்காலிக பாதை அமைக்கப்பட்டது சரிவர செய்யாததால் மண்மேடுகள் அரித்துக் கொண்டு ஒத்தையடி பாதையாக இருந்து வருகிறது. இதனால் வரும் சித்திரை மாதம் கிராம பகுதிகளில் திருவிழாக்கள் தொடங்க இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த தற்காலிக பாதையை தான் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் 2 கிலோ மீட்டர் கடந்து தான் சாலையை அடைய வேண்டியசூழ்நிலை இருந்து வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேர்தல் காலத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தென்கரை வாய்க்காலில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதையை மீண்டும் சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தென்கரை வாய்க்கால் புதிய பாலம் கட்டுமான பணி துவங்கியது சேதமடைந்த தற்காலிக பாதையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tenkarai canal ,British ,Kulithalai Kadambara ,Musiri Periyar bridge ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் நாளை உப்பு...