×

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய மூன்று நபர்கள் கைது..!!

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையிலிருந்து 10 கிலோ தங்க கட்டிகளை படகு மூலம் 3 பேர் கடத்தி வருவதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று இரவு மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோரப்படைகள் இணைந்து மண்டபத்தை அடுத்துள்ள கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு நாட்டு படகில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த வீரர்கள் அப்படகை சோதனை செய்த போது படகில் இருந்து ஒரு பார்சல் கடலில் வீசியதில் அதில் தங்கக்கட்டிகள் இருப்பதாக தெரியவந்தது.

மேலும் 3 பேரையும் கைது செய்த கடலோர காவல் படை அதிகாரிகள் காவல்படை அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரும் போது கடலில் வீசியதாக தெரிவித்தனர். தங்க கட்டிகளை மணலி தீவில் தூக்கி வீசியதாக கூறியதை அடுத்து கடலுக்குள் தேட ஸ்கூபா வீரர்கள், முத்துக்குளிக்கும் நபர்கள் வரவழைக்கப்பட்டு 5 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ச்சியாக இலங்கையிலிருந்து தங்க கட்டிகள் ராமேஸ்வரத்திற்கு கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இதை குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடந்த 6 ,7 மாதங்களில் 70, 80 கிலோவிற்கு மேற்பட்ட தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டு கடலில் வீசி மீட்கப்பட்டு கடலோரக் காவல்படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய மூன்று நபர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Rameswaram ,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு