×
Saravana Stores

வீடு, வீடாக பூத் சிலிப் விநியோகம் தொடக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.5: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், தேர்தலில் வாக்காளிக்க வீடு வீடாக சென்று பூத் சிலிப்புகள் வழங்கும் பணியை, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி நேற்று தொடங்கி வைத்தார். தர்மபுரி நாடாமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், 314 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 1,28,495 ஆண்களும், 1,27,813 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 14 பேர் என மொத்தம் 2,56,322 வாக்காளர்கள் உள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், கிராமங்கள் தோறும் பூத் சிலிப்புகள் வழங்கும் பணியை, ேநற்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா தொடங்கி வைத்தார். இப்பணியில் விஏஓ.,க்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடி வாரியாக பூத் சிலிப்புகளை பிரித்து வீடு, வீடாக நேரில் சென்று, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு இன்று முதல் வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், பாப்பிரெட்டிபட்டி தாசில்தார் சரவணன், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், ஆர்.ஐ. கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வீடு, வீடாக பூத் சிலிப் விநியோகம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Papriprettipatti ,Returning Officer ,Paparettipatti Assembly Constituency ,Parliamentary Constituency ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளியை தாக்கிய தம்பதி மீது வழக்கு