×
Saravana Stores

அரசு பள்ளி கட்டிடங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை இடமாற்ற வேண்டும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

நாகர்கோவில், ஏப்.5: தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவருவதாகவும் , அது பள்ளி நிர்வாகத்திற்கு இடையூறாக உள்ளதாகவும் அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகங்களை உடனடியாக பள்ளி வளாகத்திற்கு வெளியே ஏதேனும் ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு பொதுப்பணித்துறையால் நிர்ணயம் செய்யப்படும் வாடகையினை நிர்ணயம் செய்து கொள்ளவும் அதற்கான கருத்துருவினை 30.04.2024 க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் , மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளிக் கட்டிடங்களில் செயல்படவில்லை என்பதை கண்டிப்பாக உறுதி செய்தல் வேண்டும். இல்லையெனில் மேற்காணும் பணியினை செயலாக்கம் செய்யப்படவில்லை என்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் இயங்கி வரும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் , மாவட்டக் கல்வி அலுவலகங்களை பொதுப்பணித்துறை நிர்ணயிக்கும் வாடகையின் அடிப்படையில் உடனடியாக இடம் மாற்றம் செய்து விட்டு அதன் அறிக்கையினை 10.04.2024 க்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்பவேண்டும். வரும் கல்வி ஆண்டில், பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் எந்த ஒரு முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களும் செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறது.

The post அரசு பள்ளி கட்டிடங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை இடமாற்ற வேண்டும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Education ,Nagercoil ,Tamil Nadu ,Elementary Education ,District Primary Education Offices ,District Education Offices ,Dinakaran ,
× RELATED வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட...