×

மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்

திருவில்லிபுத்தூர், ஏப்.5: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்க உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பயிற்சி முகாம் ஆண்டாள் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் உதவி தேர்தல் அதிகாரி கணேசன் சரஸ்வதி மற்றும் தாசில்தார் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மண்டல அலுவலர்களுக்கு கோயில் நிலங்களுக்கான தாசில்தார் மாரிமுத்து கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட மண்டல அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Training ,Camp ,Thiruvilliputhur ,Tamil Nadu ,Tenkasi ,Election Training Camp for Regional Officers ,
× RELATED கோவில்பட்டி பள்ளியில் மாநில கபடி பயிற்சி முகாம்