×

ஷொர்ணூர் – நிலம்பூர் ரோடு இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

பாலக்காடு, ஏப். 5: தென்னக ரயில்வே பாலக்காடு மண்டல நிர்வாகத்திற்கு உட்பட்ட ஷொர்ணூர் – நிலம்பூர் ரோடு இடையே மின்சார ரயில் இணைப்பு பணிகள் முழுமை அடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.  கேரளா மாநிலம், ஷொர்ணூர் முதல் நிலம்பூர் ரோடு ரயில் நிலையம் வரையில் 65.12 கிமீ பிராட் கேஜ் தண்டவாளத்தில் மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டது. தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) ஏ.கே.சித்தார்த்தா, திட்ட தலைமை இயக்குநர் ஷமீர் டிக், மண்டல ரயில்வே துணை மேலாளர் ஜெயகிருஷ்ணன், சந்தீப் ஜோசப், ஆகியோர் மின் இணைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

ரூ.70 கோடி செலவில் இந்த மின் இணைப்பு திட்டப்பணிகள் நடைபெற்றது. மேலாற்றூரில் இதற்காக சப்-ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஷொர்ணூர் – நிலம்பூர் – ஷொர்ணூர் இடையே பாசன்ஜர் ரயில் சேவை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து விரைவில் இந்த வழித்தடத்தில் மெமு ரயில் சேவையும் துவங்கப்படும் என ரயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர். இயற்கை சூழ்ந்த காட்டின் நடுவே ஷொர்ணூர் சந்திப்பு, நிலம்பூர் ரோடு தண்டவாளம் அமைந்துள்ளது. ஷொர்ணூரிலிருந்து அங்காடிப்புரம், திரூர் வழியாக நிலம்பூர் சென்று திரும்ப இதே வழித்தடத்தில் மறு மார்க்கமாக ரயில் சேவை நடைபெறும் என ரயில்வேதுறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

The post ஷொர்ணூர் – நிலம்பூர் ரோடு இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Shornur – ,Nilampur road ,Palakkad ,Shornur ,Nilambur road ,Southern Railway Palakkad ,Kerala ,Nilampur ,Shornur - Nilampur road ,Dinakaran ,
× RELATED மரத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி