×

கொஞ்சம் ஏமாந்தீங்க அவ்வளவுதான் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் ரத்தம் குடிக்க வந்துவிடும்: முதல்வர் ஜெகன்மோகன் பிரசாரம்

திருமலை: திருப்பதி மாவட்டம் குருராஜுபள்ளியில் இருந்து தொடங்கி காளஹஸ்தி வழியாக நாயுடுப்பேட்டையில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் 8வது நாளான நேற்று பஸ் யாத்திரையை தொடங்கினார். அப்போது நடந்த பிரசார மாநாட்டில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: முதியோர்களுக்கு மாற்று திறனாளிகள், விதவைகளுக்கு வீட்டிற்கே சென்று ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி விடிந்தவுடன் தன்னார்வலர்கள் நேரடியாக வீடு வீடாக வந்து பென்சன் வழங்கி வந்தனர். தேர்தல் வருவதால் பொறாமை கொண்ட சந்திரபாபு தனது உறவினரான நிம்மகட்டா ரமேஷ் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து தன்னார்வலர்கள் மூலம் வீட்டிற்கே பென்சன் வழங்குவதை தடுத்து நிறுத்தினார். இதனால் வெயிலில் நடக்க முடியாமல் பென்சன் பெற சென்று 31 முதியோர்கள் உயிரிழந்து விட்டனர். இரண்டு நாட்களில் இவ்வளவு பேர் இறந்தது வருத்தமளிக்கிறது. 31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு தான் கொலையாளி. இரண்டு மாதங்கள் பொறுமையாக இருங்கள் மீண்டும், ஜூன் 4ம் தேதி மீண்டும் ஆட்சிக்கு வருவேன். தன்னார்வ அமைப்பு மூலம் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வந்து பென்சன் வழங்கப்படும். கொஞ்சம் ஏமாந்தால் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் இரத்தம் குடிக்க வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post கொஞ்சம் ஏமாந்தீங்க அவ்வளவுதான் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் ரத்தம் குடிக்க வந்துவிடும்: முதல்வர் ஜெகன்மோகன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Chandramukhi ,Chief Minister ,Jaganmohan Prasaram ,Tirumala ,Andhra ,Chief Minister YS ,Jaganmohan ,Kururajupalli ,Tirupati district ,Nayuduppet ,Kalahasti ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...