×

நான் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது: மே.வங்கத்தில் மோடி பிரசாரம்

கூச் பெஹார்: நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) கொண்டு வந்துள்ளோம். இந்த சட்டத்தை பற்றி வதந்திகளையும், பொய்களையும் பரப்புகிறார்கள். உண்மையிலேயே, பாரத தாய் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு சிஏஏ மூலம் குடியுரிமை வழங்குவது தான் மோடியின் உத்தரவாதம். ஊழலை ஒழிக்க வேண்டும் என நான் சொல்கிறேன். எதிர்க்கட்சிகள் ஊழல்வாதிகளை காப்பாற்றுங்கள் என்கிறார்கள். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதையும், ஏழைகளுக்கு நீதி கிடைப்பதையும் உறுதி செய்வேன். அடுத்த ஐந்தாண்டுகள் ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டு பாஜ ஆட்சியில் நீங்கள் பார்த்த வளர்ச்சி வெறும் டிரைலர் தான். இன்னும் நாட்டுக்காக நான் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. மேற்கு வங்கத்தில் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளுக்கு பாஜவால் மட்டுமே முடிவு கட்ட முடியும். சந்தேஷ்காலி குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி என்று பாஜ உறுதியளித்துள்ளது. குற்றவாளிகள் தங்களின் எஞ்சிய வாழ்நாளை சிறையில் தான் கழிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post நான் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது: மே.வங்கத்தில் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Bengal ,Cooch Behar ,Mother India ,Dinakaran ,
× RELATED வசமாக சிக்கியவர்களே அமலாக்கத்துறை,...