×

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தபால் வாக்கு: முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்களின் உயிர்காக்கும் பணியை இந்த ஆம்புலன்ஸ்கள் செய்து வருகின்றன. இதில் ஒரு ஓட்டுநர், ஒரு மருத்துவ உதவியாளர் என இருவர் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ பணியாளர்கள் சொந்த மாவட்டங்களில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் வரும் 19ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தபால் வாக்குகள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகையை மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதேபோல் பணிக்கு செல்லும் அனைத்து ஊழியர்களுக்கும் தபால் வாக்குகள் பதிவு செய்ய ஆவண செய்ய வேண்டும்.

The post 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தபால் வாக்கு: முஸ்லிம் லீக் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Muslim League ,Chennai ,Tamil Nadu ,president ,VMS ,Mustapha ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி...