×

பிரசாரத்திற்கு 6 மணி நேரம் தாமதமாக வந்த பிரேமலதா: வெயிலில் காத்திருந்த கூட்டம் தெறித்து ஓட்டம்

அம்பத்தூர்: அம்பத்தூர் பகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரசாரத்திற்கு 6 மணி நேரம் தாமதமாக வந்ததால் வெயிலில் காத்திருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து, கூட்டணி கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்ற. அதன்படி, அதிமுகவில் கூட்டணி கட்சியாக உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, கணவர் விஜயகாந்தின் பெயரை கூறி அழுது அனுதாப அலையை உருவாக்க முயன்று வருகிறார்.

இந்நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருவேற்காடு, ஆவடி, பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 11 மணிக்கு பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் கூட்டத்தை காண்பிக்க அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆட்களை பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் பிரேமலதா வராததால் உச்சி வெயிலில் மாலை 3 மணி வரை காத்திருந்தவர்களில் பாதி பேர் புறப்பட்டு சென்றனர். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு பிரேமலதா வந்து விடுவார் என்று கூறப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கே அவர் வந்ததார். அதற்குள், முக்கால்வாசி பேர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் கூட்டமே இல்லாத நிலையில், பரிதாபமாக உட்கார்ந்திருந்த சிலரை பார்த்து பேசி விட்டு சென்றார்.

The post பிரசாரத்திற்கு 6 மணி நேரம் தாமதமாக வந்த பிரேமலதா: வெயிலில் காத்திருந்த கூட்டம் தெறித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Ampathur ,DMD ,general secretary ,Sriperumbudur ,AIADMK ,Premkumar ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...