×

செங்கல்பட்டில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஒரத்தி கிராமம் களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (28). அதேபகுதியில், ராஜாமங்களம் பகுதியை சேர்ந்தவர் அபிதா (23). இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அபிதாவை செங்கல்பட்டு கோகுலபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அபிதாவை அனுப்பி வைத்தனர். அங்கிருந்தபடியே அபிதா தன் காதலன சதீஷிடம் செல்போனில் பேசி காதலை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு அபிதா வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அபிதா வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அக்கம் பக்கம் என பல இடங்களிலும் தேடினர். இதையடுத்து, அபிதா மாயமானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் அபிதாவை காணவில்லை என்று புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அபிதாவை தேடி வந்தனர். இதனை அறிந்த சதீஷ், அபிதா கோயிலில் திருமணம் செய்து கொண்டு நேற்று முன்தினம் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, போலீசார் இருதரப்பு பெற்றோரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

The post செங்கல்பட்டில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattal ,Chengalpattu ,Satish ,Kalathur, Orathi village ,Madhuranthagam, Chengalpattu district ,Abitha ,Rajamangalam ,
× RELATED செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!