சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்றிரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது;
அதிமுக அலுவலகம் சென்று கையெழுத்திடும்வரை பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட நிர்ப்பந்தம், மிரட்டல்கள் வந்தது. அவற்றையெல்லாம் தூக்கிஎறிந்துவிட்டு ஜெயலலிதாபோல தைரியமாக முடிவெடுத்தேன். இந்த முறை அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி என்பதை மக்களுக்காக உறுதியாக முடிவு செய்தோம். எத்தனையோ நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டது. வங்கி கணக்குகளை முடக்கி அச்சுறுத்தினர். நாங்கள் பனங்காட்டு நரி.
இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம். எத்தனை சோதனை வந்தாலும் கேப்டனும் நானும் அஞ்சுபவர்கள் கிடையாது. எனவே ஆளும் பாஜவுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும். பாமக, பாஜக நம்முடன் கூட்டணியில் இல்லாததற்கு கையெடுத்து கும்பிடவேண்டும். இது ராசியான மக்கள் விரும்பும் தமிழ்நாடே போற்றும் வெற்றி கூட்டணி.
பாமக இருந்தால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காது எனவும் பாஜக இருந்தால் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது. கடவுள் புண்ணியத்திலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 தெய்வங்கள் ஆசிர்வாதத்துடன்அவர்களாகவே வெளியே சென்றுவிட்டனர். எனவே, தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். விஜயகாந்த் திரைப்பட வசனமான துளசி கூட வாசம் மாறும் தவசி வார்த்தை மாறாது. இவ்வாறு கூறினார்.
The post கூட்டணியில் சேரும்படி தொடர்ந்து பாஜவிடம் இருந்து மிரட்டல் வந்தது: பிரேமலதா ஓபன் டாக் appeared first on Dinakaran.