×

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும்: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பரப்புரை..!!

கொல்கத்தா: பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலில், மம்தா திதிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 2019ம் ஆண்டில், நான் இதே மைதானத்திற்கு ஒரு பேரணியில் உரையாற்ற வந்தேன். அந்த நேரத்தில் அவர் இந்த மைதானத்தின் நடுவில் ஒரு மேடையை கட்டினார். அதை அளவு சிறியதாக மாற்றினார். இதற்கு பொதுமக்கள் பதில் அளிப்பார்கள் என்று அப்போது கூறியிருந்தேன். இன்று, அப்படி எதுவும் செய்யவில்லை, உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று எந்த தடையையும் ஏற்படுத்தாத வங்காள அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

பல தசாப்தங்களாக காங்கிரஸ் ‘கரிபி ஹடாவோ’ என்ற முழக்கத்தைக் கொடுத்து வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது பாஜக அரசுதான். நாங்கள் உண்மையாக உழைத்ததாலும், நமது ‘நியாத்’ சரியாக இருப்பதாலும் இது நடந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும். சந்தேஷ்காலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காக்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு எவ்வளவு முயன்றது என்பதை முழு நாடும் பார்த்திருக்கிறது. சந்தேஷ்காலி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்ய பாஜக தீர்மானித்துள்ளது.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழிக்க வேண்டும் என மோடி குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த டிஎம்சி அரசு அனுமதிப்பதில்லை. மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதே பாஜகவின் அடையாளம். நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் இதைச் செய்ய டிஎம்சி அரசு அனுமதிக்கவில்லை. மேற்கு வங்கத்திற்கு சாதனை அளவில் பணம் கொடுத்தாலும், டிஎம்சியால் பல திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

The post பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும்: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பரப்புரை..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,PM Modi ,election general meeting ,West Bengal ,Kolkata ,Narendra Modi ,Shri Narendra Modi ,Mamta Diti ,
× RELATED “அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி...