×

திண்டுக்கல் அருகே லாரி பார்க்கிங்கான சர்வீஸ் சாலை-வாகனஓட்டிகள் அவதி

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே திண்டுக்கல்-பெங்களூர் நான்கு வழிச்சாலை உள்ளது.இப்பகுதி திண்டுக்கலிருந்து, கரூர், சேலம், பெங்களூர், திருச்சி, கொடைக்கானல், சென்னை ஆகிய பகுதிகளை பிரிக்கும் முக்கிய சாலையாக உள்ளது.திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து வரும் நகர பேருந்துகள் அஞ்சலி ரவுண்டானா அருகே கலெக்டர் அலுவலகத்திற்கு நான்கு வழிச்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த ரோடு வழியாக செல்லும் அரசு நகர் மற்றும் தனியார் பேருந்துகள், செங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் சேருகின்றன.திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் உள்ள இந்த சர்வீஸ் சாலையில் விதிமுறைகளை மீறி பகல் நேரத்தில் பாதி ரோட்டை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.மேலும் விபத்து அபாயமும் நிலவுகிறது. ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திண்டுக்கல் அருகே லாரி பார்க்கிங்கான சர்வீஸ் சாலை-வாகனஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Dintugul ,Dindukal-Bangalore ,Dintugul Collector's Office ,Thindukkal ,Karur ,Salem ,Bangalore ,Trichy ,Dindigul ,Dinakaran ,
× RELATED தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல்,...