×

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் திமுகவின் சதவீதம் அதிகரிக்கும் : அமைச்சர் சேகர்பாபு .

சென்னை : பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் திமுகவின் சதவீதம் அதிகரிக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வருடம் முழுவதும் பிரதமர் மோடி அமர்ந்திருந்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் சேகர்பாபு குறிப்பிட்டார். முன்னதாக சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க நகர் தெற்கு பகுதியில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களை ஆதரித்து வீதி வீதியாக பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

The post பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் திமுகவின் சதவீதம் அதிகரிக்கும் : அமைச்சர் சேகர்பாபு . appeared first on Dinakaran.

Tags : DMK ,Modi ,Tamil Nadu ,Minister Shekharbabu ,Chennai ,Minister ,Shekharbabu ,Chennai East District ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு...