×

மழைநீரால் சாலை துண்டிப்பு ஆபத்தான முறையில் கண்மாய் நீரில் இறங்கி பள்ளி செல்லும் மாணவர்கள்-திருப்பரங்குன்றம் அருகே பரிதாபம்

திருப்பரங்குன்றம் : மழைநீரால் சாலை துண்டிக்கப்பட்டதால் பஸ் வராததால் 2 கி.மீ தூரத்திற்கு ஆபத்தான முறையில் கண்மாய் நீரை கடந்து நடந்தே பள்ளிக்கு செல்லும் அவலநிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ளது மாவிலிபட்டி கிராமம். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள தென்பழஞ்சி கண்மாய் நிரம்பி வருகிறது. மாவிலிபட்டி கிராமத்திற்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து தென்பழஞ்சி வழியாக தார்ச்சாலை உள்ளது. இச்சாலையானது தென்பழஞ்சி கண்மாயை ஒட்டியுள்ளதால், தற்போது இந்த சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.இதனால் இந்த சாலையில் பொது போக்குவரத்து தடைபட்டுள்ளது. மாவிலிபட்டி கிராமமக்கள் இந்த சாலை வழியாகத்தான் திருநகர், திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை நகர் பகுதியை அடைய முடியும். மேலும் இங்குள்ள 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திருநகர் மற்றும் திருப்பரங்குன்றம் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அரசு பஸ் மூலம் பள்ளி சென்று திரும்புகின்றனர்.இந்த நிலையில் இவர்கள் செல்லும் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் அரசு பஸ் தற்போது மாவிலிபட்டிக்கு முன்பு உள்ள தென்பழஞ்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காலை, மாலை இரு வேளையும் மாவிலிபட்டி கிராமத்தில் இருந்து தென்பழஞ்சி வரை 2 கி.மீ தூரம் வரை தண்ணீரில் ஆபத்தான முறையில் நடந்து சென்று பள்ளி சென்று திரும்புகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி மாற்று ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.28. தொடர் மழையால் உரப்பனூர் கண்மாய் பகுதியில் மண் அரிப்பு-வாகன ஓட்டிகள் பீதிதிருமங்கலம் : உரப்பனூர் கண்மாய் வழியாக மேலஉரப்பனூர் கிராமத்திற்கு செல்லும் கண்மாய்க்கரை சாலை மழையால் பல இடங்களில் அரிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மதுரை திருமங்கலம் – சோழவந்தான் மெயின் ரோட்டிலிருந்து மேலஉரப்பனூருக்கு செல்ல கண்மாய் கரையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. உரப்பனூர் கண்மாய் கரையையொட்டி அமைந்துள்ள இந்த கண்மாய் சாலையில் லாரிகள், இரண்டு மற்றும் மூன்று சக்கரவாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. கண்மாய் கரை சாலையில் ஒரு புறமும் உரப்பனூர் கண்மாயும், மற்றொரு புறம் நெல்வயல்களும் காட்சிதருவதால் பொதுமக்கள் பலரும் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழைக்கு உரப்பனூர் கண்மாய்க்கரை சாலையில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை தற்போது வாகனத்தில் செல்வோரை அச்சுறுத்தி வருகிறது.எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கினால் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் கீழே இறங்கினால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, இந்த கண்மாய் கரை சாலையில் உள்ள மண் அரிப்புகளை சரிசெய்து பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருமங்கலம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்….

The post மழைநீரால் சாலை துண்டிப்பு ஆபத்தான முறையில் கண்மாய் நீரில் இறங்கி பள்ளி செல்லும் மாணவர்கள்-திருப்பரங்குன்றம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Tirupparankundam ,Tirupparankunam ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு