×

பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம்: மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

சென்னை: அனைத்து பள்ளி வாகனங்களிலும் இனி ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களுக்கான 32 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளி வாகனங்களில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக வரும் புகாரை அடுத்து தனியார் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி வாகனங்களை இயக்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

* அனைத்து பள்ளி வாகனங்களிலும் இனி ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

* பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

* சி.சி.டி.வி. கேமரா பொருத்தி, காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்க வேண்டும்.

* கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க நியமிக்க வேண்டும்.

* ஓட்டுநர்களுக்கு தினமும் சுவாச பரிசோதனை செய்த பிறகே வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும்.

* ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

* போக்சோ சட்ட விதிகள் பற்றி ஒட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்.

* வாகன ஓட்டுநர், உதவியாளர், தினமும் மது அருந்தியுள்ளார்களா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

* பள்ளி வாகனங்கள், ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, தனியார் பள்ளி வாகனங்கள் தொடர்பான தகவல்களை ஏப்.5-க்குள் சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம்: மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…