×

மக்களவை தேர்தல்: ஈரோட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு: மக்களவை தேர்தல்: ஈரோட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. ஈரோடு தொகுதியில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 21,805 பேரும், 9,824 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். 2,201 முதியவர்களும், 800 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

விருப்பம் தெரிவித்த 3,001 பேரிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏப்.6 வரை 3 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. தபால் வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்.8-ம் தேதி மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post மக்களவை தேர்தல்: ஈரோட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Lok Sabha election ,Erote ,Erode ,Tamil Nadu Parliamentary elections ,Tamil Nadu ,Dimuka ,Adimuka ,Baja ,Tamil Party ,Dinakaran ,
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13...