×

மன்னை ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோற்சவ 7ம் நாள் விழா புஷ்ப பல்லக்கில் பெருமாள் சேவை

மன்னார்குடி, ஏப். 4: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 7ம் நாளான நேற்று பெருமாள் ராஜ அலங்காரத் தில் வண்ண புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான ராஜகோபால சுவாமி கோயிலில் 18 நாள் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 7ம் நாளான நேற்று உற்சவர் பெருமாள் பல்லக்கு சேவையில் கோயிலி ருந்து புறப்பட்டு நான்கு வெளி ராஜவீதிகளின் வழியாக யானை வாகன மண்டபத்திற்கு வந்தடைந்தார். அங்கு பெருமாளு க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், பெருமாள் ராஜ அலங்காரத்தில் வண்ண புஷ்ப பல்லக் கில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரி சனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் கருடர் இளவர சன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாதவன், அறங்காவ லர் குழு உறுப்பினர்கள், மண்டகபடிதாரர்கள், ஊழியர்கள் மற்றும் தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

The post மன்னை ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோற்சவ 7ம் நாள் விழா புஷ்ப பல்லக்கில் பெருமாள் சேவை appeared first on Dinakaran.

Tags : Panguni Brahmotsava ,Mannai Rajagopala Swamy Temple ,Perumal Seva ,Pushpa Pallak ,Mannargudi ,Panguni Brahmotsava festival ,Mannargudi Rajagopala Swamy Temple ,Uttaruli ,Perumal Raja Amakaranth ,Tiruvarur District Mannargudi ,Tamil Nadu ,Mannai Rajagopala Swamy ,Temple ,Panguni Brahmotsava 7th Day Ceremony Pushpa Pallak Perumal Seva ,
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர்...