×

சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி கடலில் நீந்தி சிறுவர்கள் விழிப்புணர்வு

ராமேஸ்வரம், ஏப்.4: கடல் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுக்காக்க வலியுறுத்தி தலைமன்னார்- தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சிறுவர்கள் விழிப்புணர்வு செய்தனர். சென்னையை சேர்ந்தவர் அரவிந்த் தருண்ஸ்ரீ. இவர், அவரது மகள் தாரகை(9), மற்றும் இவருடன் அதே பகுதியை சேர்ந்த 7 வயது பள்ளி சிறுவன் நிஸ்விக் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் நன்பகலில் ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து தலைமன்னார் கடல் எல்லைக்கு நீந்துவதற்காக படகில் புறப்பட்டு சென்றனர். இவர்களுடன் நீச்சல் பயிற்சி பெற்ற 25 பேர் கொண்ட குழுவினரை சுங்கத்துறை மற்றும் துறைமுக குடியேற்ற போலீசார் அனுமதி ஆவணங்களை ஆய்வு செய்து அனுப்பி வைத்தனர்.

அரவிந்த் அவரது மகள் தாரகை மற்றும் நிஸ்விக் மூவரும் இலங்கை தலைமன்னார் கடலில் நேற்று அதிகாலை நான்கு மணிக்கு நீந்த துவங்கி மாலை நான்கு மணிக்கு தனுஷ்கோடி கடற்கரையை வந்தடைந்தனர். இவர்களை இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் வரவேற்று உற்சாகபடுத்தினர். கடலின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக நீந்தி சாதனை முயற்சி மேற்கொண்ட சிறுவர்களுக்கு அரிச்சல்முனை கடற்கரையில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

The post சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி கடலில் நீந்தி சிறுவர்கள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Thalaimannar- ,Danushkodi ,Arvind Tharunshree ,Chennai ,Daragai ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை