×

சத்தியமங்கலத்தில் தேர்தல் விதிகளை மீறி கூட்டம் நீலகிரி பாஜ வேட்பாளர் எல்.முருகன் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக புகாரின்பேரில் நீலகிரி பாஜ வேட்பாளர் எல்.முருகன், பள்ளி நிர்வாகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி தொகுதியில் பாஜ வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 26-ம் தேதி சத்தியமங்கலம்- பண்ணாரி சாலையில் கோம்பு பள்ளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. தகவலறிந்து பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதில் தேர்தல் விதிமுறைகளை மீறி தனியார் பள்ளியில் கட்சி சம்பந்தமான நிகழ்ச்சி நடத்திய பாஜ வேட்பாளர் எல்.முருகன், நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்த பள்ளி நிர்வாகம் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோர் மீது தேர்தல் விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்தியதில் தகவலை உறுதிப்படுத்திய சத்தியமங்கலம் போலீசார், எல்.முருகன், பள்ளி நிர்வாகம் மற்றும் 100 பேர் மீது 143 மற்றும் 171 (ஹெச்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சத்தியமங்கலத்தில் தேர்தல் விதிகளை மீறி கூட்டம் நீலகிரி பாஜ வேட்பாளர் எல்.முருகன் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Nilgiri BJP ,L. Murugan ,Sathyamangalam ,Nilgiri ,BJP ,
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...