- மத்திய அமைச்சர்
- பாஜக
- திரிபுரா
- அகர்தலா
- பிரதிமா பூமிக்
- மேற்கு திரிபுரா
- லோக்சபா தொகுதி
- மத்திய இணை அமைச்சர்
- பிரதிமா பூமி
அகர்தலா: பாஜகவில் மீண்டும் சீட் தராததால் திரிபுராவில் இருக்கும் தனது வீட்டிலேயே ஒன்றிய அமைச்சர் பிரதிமா பூமிக் முடங்கியுள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி பாஜக எம்பியும், ஒன்றிய இணை அமைச்சருமான பிரதிமா பூமிக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக முன்னாள் முதல்வரும், ராஜ்யசபா உறுப்பினருமான பிப்லப் குமார் தேப் களம் இறக்கப்பட்டுள்ளார். அதனால் விரக்தியில் உள்ள பிரதிமா பூமிக், தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகியுள்ளார். தனது சொந்த ஊரான செபஹிஜாலா மாவட்டம் தன்பூரில் உள்ளார். இதுவரை ஒரு கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்.
உள்ளூர் பாஜக தலைவரும், அமைச்சர் பூமிக்கின் ஆதரவாளர் கூறுகையில், ‘அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் உள்ளார். தீவிர பிரசாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. பிரசாரத்தில் இருந்து விலகியுள்ளார். திரிபுராவில் பிப்லப் குமார் தேப் ஆதரவாளர்களால், ஓரங்கட்டப்பட்டார். கடந்த மார்ச் 30ம் தேதி தன்பூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அன்றைய கூட்டத்தில் மாநில அளவிலான தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பிப்லப் குமார் தேப் வேட்புமனு தாக்கல் செய்த போது கலந்து கொண்டார். ஆனால் முதல்வர் மாணிக் சாஹா மற்றும் வேட்பாளர் பிப்லப் குமார் தேப் இருவரிடமிருந்தும் விலகியே இருந்தார்’ என்றார்.
The post பாஜகவில் மீண்டும் சீட் தராததால் வீட்டில் முடங்கிய ஒன்றிய அமைச்சர்: திரிபுராவில் கோஷ்டி பூசல் appeared first on Dinakaran.