×
Saravana Stores

வெந்தய பச்சைப் புளியோதரை

தேவையானவை:

உதிராக வடித்த சாதம் – 2 கப்,

தாளிக்க:

நல்லெண்ணெய் – 50 கிராம்,
கடுகு, பெருங்காயம்,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
வேர்க்கடலை – வறுத்தது – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.

அரைக்க:

புளி (கொட்டை நார் நீக்கியது) – சிறு எலுமிச்சை அளவு,
உப்பு – 2 டீஸ்பூன்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 8.

செய்முறை:

புளி, உப்பு, சிவப்பு மிளகாய், வெந்தயம் இவற்றை ¼ கப் நீரில் 10 நிமிடம் ஊறவிட்டு, நைசாக அரைத்து, சாதத்தில் கலக்கவும். 50 கிராம் நல்லெண்ணெயை ஊற்றி தாளிக்கும் பொருட்களை நன்கு தாளித்து சாதத்தின் மீது கொட்டி கலந்து நன்கு கிளறி மூடி ½ மணி நேரம் ஊறவிட்டு பரிமாறவும்.

The post வெந்தய பச்சைப் புளியோதரை appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஆப்பிள் ரிப்பன் சேவ்