×

சென்னை அருகே சித்த மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொண்ட முதியவர் பலி; சித்த மருத்துவர் கைது..!!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே சித்த மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொண்ட முதியவர் ராஜேந்திரன் உயிரிழந்தார். மூச்சு விடுவதில் சிக்கல் இருந்ததால் முதியவர் ராஜேந்திரன் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சித்த மருத்துவர் பெருமாள் ஊசி போட்டதை அடுத்து சற்று நேரத்திலேயே வாயில் நுரை தள்ளி ராஜேந்திரன் உயிரிழந்தார். ராஜேந்திரன் உடலை கைப்பற்றி சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து பூவிருந்தவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை அருகே சித்த மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொண்ட முதியவர் பலி; சித்த மருத்துவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Siddha Hospital ,Chennai ,Siddha ,Rajendran ,Hospital ,Poovindavalli, Chennai ,Rajendran Siddha Hospital ,Doctor ,Perumal ,Dinakaran ,
× RELATED ‘கோடையை இதமாக்க இயற்கையின் கொடைகள்...