×

தேனி மாவட்டத்தில் பறக்கும்படை சோதனையில் ரூ.56.40 லட்சம் பறிமுதல்: இரவு, பகலாக தொடரும் கண்காணிப்பு

 

தேனி, ஏப்.3: தேனி மாவட்டத்தில் தேனி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலையொட்டி பறக்கும் படை நடத்திய சோதனையில் இதுவரை ரூ.56 லட்சத்து 40 ஆயிரத்து 470 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலையொட்டி கடந்த மாதம் 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் தேனி மாவட்டத்தில் அமலில் இருந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளையொட்டி, தேனி மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் அதிகாரிகள் வாகன தணிக்கை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.13 லட்சத்து 91 ஆயிரத்து 390ம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.12 லட்சத்து 6 ஆயிரத்து 900ம், போடி சட்டமன்ற தொகுதியில் ரூ.24 லட்சத்து 59ஆயிரத்து 180ம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் ரூ.5 லட்சத்து 83 ஆயிரமுமாக மாவட்ட அளவில் மொத்தம் ரூ.56 லட்சத்து 40 ஆயிரத்து 470 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post தேனி மாவட்டத்தில் பறக்கும்படை சோதனையில் ரூ.56.40 லட்சம் பறிமுதல்: இரவு, பகலாக தொடரும் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Theni district ,Theni ,Flying Squad ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை