×

சிவகங்கை மக்களவை தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்

சிவகங்கை/ திருப்புவனம்,ஏப். 3: சிவகங்கை மக்களவை தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏப்.19அன்று மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. சிவகங்கை மக்களவை தொகுதியில் தொகுதியில் திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), சிவகங்கை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 346 வாக்குச்சாவடிகளில் 3,13,886 , திருப்பத்தூரில் 334 வாக்குச்சாவடிகளில் 2,96,452, மானாமதுரையில் (தனி) 324 வாக்குச்சாவடிகளில் 2,80,153, சிவகங்கையில் 353 வாக்குச்சாவடிகளில் 2,97,894 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர்களுக்கு சம்பந்த்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. நாளை அல்லது நாளை மறு நாள் இப்பணி நிறைவடையும். மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆயிரத்து 357 வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ளன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவைகளிலும் வாக்குச்சாவடிகள் செயல்பட உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின் சப்ளை, மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சாய்வு தளம், இட வசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என்பது குறித்து ஆய்வுப்பணிகள் நடந்த நிலையில் தற்போது அடிப்படை வசதிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன.

* திருப்புவனம் தாலுகாவிற்குட்பட்ட வாக்காளர்களுக்கு நேற்று முதல் பூத் சிலிப் வழங்கும் பணியை முதன்மை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ராஜா வழங்கி துவக்கு வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் உமாமகேஷ்வரி, வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், உள்ளிட்டோர் பூத் சிலிப்களை ஊழியர்களிடம் வழங்கினார். திருப்புவனம் தாலுகாவில் 85 வயதிற்கு மேற்பட்ட 89 வாக்காளர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் 96 வாக்காளர்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சிவகங்கை மக்களவை தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Booth Silip ,Sivagangai Lok ,Sabha ,Sivagangai ,Tirupuvanam ,Sivagangai Lok Sabha ,Lok Sabha ,Tamil Nadu ,Lok Sabha Constituency ,Thirumayam ,Alangudi ,Karaikudi ,Tirupattur ,Manamadurai ,Separate ,
× RELATED மாவட்டத்தில் 100 சதவீத பூத் சிலிப் விநியோகம்