×
Saravana Stores

திருமங்கலம் பஸ் நிலையம் குறித்து அரசு முடிவெடுக்கும்

 

மதுரை, ஏப். 3: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாலமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு,‘வேங்கடசமுத்திரம் பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு பதிலாக திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தை இடித்து மீண்டும் கட்ட முயற்சி எடுக்கப்படுகிறது. எனவே திருமங்கலம் பஸ் நிலையத்தை இடிக்கவும், மறு கட்டமைப்பு செய்யவும் தடை விதித்து வேங்கடசமுத்திரம் புதிய பஸ் நிலையத்தை கட்டுமாறும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்ட எஸ்பி., தரப்பில் தாக்கல் செய்த நிலை அறிக்கையில்,‘கடந்த 2018 முதல் 2023ம் ஆண்டு வரை திருமங்கலம் பஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் 110 விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் 14 பேர் இறந்துள்ளனர். 133 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள்,‘தற்போதைய நெரிசல் மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு திருமங்கலம் நகராட்சி பஸ் நிலையம் அமைப்பது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் 3 மாதங்களில் உரிய முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post திருமங்கலம் பஸ் நிலையம் குறித்து அரசு முடிவெடுக்கும் appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Madurai ,Balamurugan ,Tirumangalam, Madurai ,ICourt ,Venkatasamuthram ,Tirumangalam Nagar ,Dinakaran ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே இருசக்கர...