×

இந்திய அரசுக்கோ, இலங்கை அரசுக்கோ சொந்தம் இல்லை ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது கச்சத்தீவு: சர்வதேச நீதிமன்றம் மூலம் மீட்போம், அமைச்சர் ரகுபதி உறுதி

நாகப்பட்டினம் அருகே அக்கரைப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து அமைச்சர் ரகுபதி நேற்று பிராசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கச்சதீவு விவகாரத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை. கச்சதீவு 50 ஆண்டு கால பிரச்னையாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் போது எல்லாம் கச்சத்தீவு பிரச்னை பேசப்படும்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கலைஞர் கச்சத்தீவை தாரைவார்க்க சம்மதம் தெரிவித்தார் என உள்ளதா? பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களிடம் இரண்டு ஆண்டு காலம் தள்ளி போடலாம் என தான் கூறியுள்ளார் என உள்ளது. அதாவது 74ம் ஆண்டு ஒப்பந்தத்தின் போது இரண்டு ஆண்டு காலம் தள்ளிப்போடலாம் என கலைஞர் கூறியுள்ளதால் 1976ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் ஆதரிக்கும் போது கச்சத்தீவை விட்டுகொடுக்க மாட்டோம் என நிர்ப்பந்தம் செய்து கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம் என முன் யோசனையில் தான் அப்படி கூறியுள்ளார்.

கச்சதீவு இந்திய அரசுக்கோ, இலங்கை அரசுக்கோ சொந்தம் இல்லை. அது ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது. இந்திய அரசுக்கு சொந்தம் இல்லாத இடத்தை தான் கொடுத்துள்ளது. இலங்கை அரசுக்கு சொந்தம் இல்லாத இடத்தை தான் வாங்கியுள்ளது. இன்றும் நாட்கள் கடந்து விடவில்லை.

ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானவர்களோ அல்லது ராமநாதபுரம் மீனவர்களோ இது இரண்டு நாட்டிற்கும் தொடர்புடைய பிரச்சனை என கூறி திஹேக் நாட்டில் உள்ள உலக சமாதான நீதிமன்றத்தில் எங்களுக்கு உரிமையானது என வழக்கும் போடும் உரிமையுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு நிச்சம் வரும். அப்போது ராமநாதபுரம் மன்னர் வாரிசை வைத்து வழக்கு தொடர்ந்து கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்திய அரசுக்கோ, இலங்கை அரசுக்கோ சொந்தம் இல்லை ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது கச்சத்தீவு: சர்வதேச நீதிமன்றம் மூலம் மீட்போம், அமைச்சர் ரகுபதி உறுதி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Government of India ,Government of Sri Lanka ,International Court ,Minister ,Raghupathi ,Communist Party of India ,Y. Selvaraj ,Akkaraipet ,Nagapattinam ,BJP ,president ,Annamalai ,Kachchadivu ,Indian Government ,Sri Lanka Government ,Dinakaran ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...