×

பாகிஸ்தான், சீனா ஆக்கிரமித்ததை ஏன் மீட்கவில்லை: கச்சத்தீவு பாஜ நடத்தும் நாடகம்; திருமாவளவன் ‘பொளீர்’

திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அரியலூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ கட்சி மற்றும் பாஜ அரசு மக்களிடையே மத உணர்வுகளை தூண்டுவதில் செலுத்துகிற கவனத்தை விட, நாட்டு நலனில் கூடுதலாக கவனம் செலுத்தவில்லை. ஒருபுறம் பாகிஸ்தான் மறுபுறம் சீனா நமது தேசத்தை ஆக்கிரமித்து வருகிறது.

நாட்டை அல்லது அரசின் ஆட்சியாளர்களை அரசை எதிர்க்கிற திறாணியற்றவராக தான் நமது மோடி பத்தாண்டு காலத்தை கடத்தியுள்ளார்.  அருணாசல பிரதேசத்தில் நமக்கு சொந்தமான பகுதிகள் நதிகளை தங்கள் தேசத்திற்கு உட்பட்ட பகுதிகள் என சீனா அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் காங்கிரஸ் இல்லாத பாரதத்தை கட்டமைப்போம். கழகங்கள் இல்லாத தமிழகத்தை கைப்பற்றுவோம் என பாஜ, தம்முடைய அரசியல் ஆதாயத்திற்கான அரசியலை மட்டுமே செய்து வருகின்றனர்.

பெரும்பான்மையான இந்து சமூகத்தினர், பாஜ இந்துக்களுக்கு விரோதமான கட்சியாக உள்ளது என உணர ஆரம்பித்து விட்டார்கள்.  கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பறிப்பதற்காக அவர்கள் நடத்துகிற நாடகம். இதனை கைவிட்டு சீன அரசால் ஆக்கிரமித்து உள்ள இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாகிஸ்தான், சீனா ஆக்கிரமித்ததை ஏன் மீட்கவில்லை: கச்சத்தீவு பாஜ நடத்தும் நாடகம்; திருமாவளவன் ‘பொளீர்’ appeared first on Dinakaran.

Tags : Pakistan ,China ,Thirumavalavan ,Poleer ,Chidambaram ,DMK ,Vichithamu Siruthaigal Party ,Ariyalur ,BJP party ,BJP ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா