×

பூக்களும், காய்களும் அதிகமாக பருத்தி செடியில் நுனி கிள்ளுதல் தொழில் நுட்பம்

அரவக்குறிச்சி. ஏப். 3: பருத்திசெடியில் பூக்களும், காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகி அதிக பலன் கிடைக்க பருத்திசெடியின் நுனி கிள்ளுதல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி லாபமடையலாம் என்று பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு வேளாண் துணை அலுவலர் கண்ணன் ஆலோசனை கூறியுள்ளார். பருத்தியில் தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதால் தேவைக்கு அதிகமாக உயரமாக வளர்ந்து விடுவதுண்டு. இதனால் செடிகள் அதிக பூச்சி நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். இச்சந்தர்ப்பங்களில் நுனி கிள்ளுதல் அவசியமாகிறது. இவ்வாறு செய்வதால் பக்கக் கிளைகள் உருவாகி பூக்களும், காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகி காய்கள் உரிய காலத்தில் வெடிக்க உதவுகிறது.

பருத்தி இரகங்களுக்கு 75-80ம் நாளில் 15வது கணுவிலும், ஒட்டு ரகங்களுக்கு 85-90ம் நாளில் 20வது கணுவிலும் தண்டின் நுனியை சுமார் 10 செ.மீ அளவுக்கு கிள்ளிவிடவேண்டும். காய்கள் திரட்சியாகவும், பருமானகும் வரை 2 சத டி.ஏ.பி கரைசலை 45 மற்றும் 75ம் நாட்களில் தெளிக்கவேண்டும். இவ்வாறாக கடைபிடித்தால் பூக்களும், காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகி அதிக பலன் கிடைக்க பருத்திசெடியின் நுனி கிள்ளுதல் தொழில் நூட்டத்தை பயன்படுத்தி லாபமடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பூக்களும், காய்களும் அதிகமாக பருத்தி செடியில் நுனி கிள்ளுதல் தொழில் நுட்பம் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Deputy ,Officer ,Kannan ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...