×

புதுவையில் 3 பேரிடம் ₹1.61 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஏப். 3: புதுச்சேரியை சேர்ந்த தேவி என்பவர் ஆன்லைனில் பகுதிநேர ேவலை தேடியுள்ளார். அப்போது டெலிகிராம் மூலம் மர்ம நபர்கள் லிங்க் அனுப்பி குறிப்பிட்ட டாஸ்க் முடித்தால் வருமானம் ஈட்டலாம் என ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பி தேவி ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் செலுத்தி டாஸ்க் விளையாட்டு விளையாடி வந்துள்ளார். பிறகு அதன்மூலம் எந்தவித வருமானமும் வராததால் அதிர்ச்சியடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அவர் புதுவை சைபர் கிரைம் ேபாலீசில் புகார் அளித்தார். அதேபோன்று அய்யப்பன் என்பவரின் தொலைபேசி எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் ெதாடர்பு கொண்டு தான் கடலோர காவல்படை அதிகாரி பேசுகிறேன். சுற்றுலா செல்ல கார் புக்கிங் செய்தேன்.

தற்போது சுற்றுலா ரத்து செய்யப்பட்டதால் கார் புக்கிங்கை ரத்து செய்து கொள்கிறேன். ஆகையால் தான் செலுத்திய பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கூறியதன்பேரில் அய்யப்பன் ரூ.14 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். பிறகு இதுசம்பந்தமாக ஆய்வு செய்தபோது வங்கி கணக்கில் அந்த மர்ம நபர் பணம் செலுத்தாதது தெரியவந்தது. மேலும், இதேபோன்று சந்திரசேகரன் என்பவர் ஆன்லைனில் பொருள் வாங்க ரூ.8 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் பொருளும் வரவில்லை, பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் அனைவரும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவையில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post புதுவையில் 3 பேரிடம் ₹1.61 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Devi ,Puduwai ,Dinakaran ,
× RELATED 9வயது சிறுமி கொலை வழக்கு புதுவை...