×

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் இளம்பெண் பலி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் இளம்பெண் பரிதாபமாக பலியானார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மணிமேகலை (24). ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் தங்கி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சென்னை பாடியை சேர்ந்த முனுசாமி (23) என்பருடன் பைக்கில் சென்று, நேற்று முன்தினம் அதிகாலை மீண்டும் சுங்குவார்சத்திரம் திரும்பினர். அப்போது, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் அருகே வந்தபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், மணிமேகலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. முனுசாமி லேசான காயம் அடைந்தார். அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மணிமேகலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Manimegala ,Sivagangai district ,Chungwarchatra ,Chennai ,Badi ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து...