×
Saravana Stores

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தகவல்


சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசின் பதிலை அடுத்து வழக்கை 17-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) என்பது வங்கக் கடலில் உருவாகிய புயலைக் குறிக்கும். வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், டிசம்பர் 3 அன்று புயலாக வலுப்பெற்றது. டிசம்பர் 5 அன்று பகல் வேளையில் நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டணத்துக்கும் இடையே கரையைக் கடந்தது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. அநேக இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ள நிலையில், புயல் கரையை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு டிசம்பர் 5ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் தமிழகத்துக்கு ரூ.450 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

கடந்த ஜனவரி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 24,25, 336 குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 வீதம் ரூ.1,455.20 வழங்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட நிவாரண தொகை கோரி விண்ணப்பித்த 53,000 குடும்பங்களுக்கு ரூ.31.73 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விவர அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு அளித்துள்ளது.

The post மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mikjam storm flood ,Government of Tamil Nadu ,iCourt ,CHENNAI ,STORM MIKJAM ,Mikjam ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED இளைஞர்களை கவரும் வகையில் புதிய சேவை.....