×

இலங்கை பற்றி வெளியுறவு அமைச்சரும் மற்றவர்களும் சிந்தித்து பேச வேண்டும்: ப.சிதம்பரம் அறிவுறுத்தல்

சென்னை: இலங்கை பற்றி வெளியுறவு அமைச்சரும் மற்றவர்களும் சிந்தித்து பேச வேண்டும் என்று ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா – இலங்கை உறவில் உரசல் ஏற்படுத்தும் வகையில் பேசிவிடக்கூடாது என்று ப.சிதம்பரம் அறிவுரை வழங்கியுள்ளார். இலங்கையில் 25 லட்சம் ஈழ தமிழர்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள் 10 லட்சம் பேர் வாழ்வதை நினைவில் கொள்ள வேண்டும். கச்சத்தீவு குறித்து உண்மைக்கு புறம்பான மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது.

இலங்கை அரசு மற்றும் 35 லட்சம் தமிழர்களுடன் மோதலை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிடக்கூடாது. ஒன்றிய அரசு சீனாவிடம் தனது ஆத்திரத்தை காட்டட்டும் என்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் 2000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மண்ணை சீனா ஆக்கிரமித்து தன் பிடியை வலுப்படுத்தி வருகிறது. இந்திய கிராமங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு சீன மொழிப் பெயர்களை அறிவித்து வருகிறது அந்தாடு என ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

The post இலங்கை பற்றி வெளியுறவு அமைச்சரும் மற்றவர்களும் சிந்தித்து பேச வேண்டும்: ப.சிதம்பரம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Chennai ,Chidambaram ,P. ,India ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...