×

சென்னை மடிப்பாக்கத்தில் பழைய பொருட்கள் சேமிக்கும் கிடங்கில் திடீர் தீ விபத்து; தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் போராட்டம்..!!

சென்னை: சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சென்னை மடிப்பாக்கம் அருகே இருக்கக்கூடிய ராம் நகர் குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் சேமிப்பு கிடங்கு ஒன்று அமைந்துள்ளது. பழைய பொருட்களை சேமித்து வைத்துள்ள இந்த கிடங்கில் தற்போது பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் ராம் நகர் பகுதி முழுவதும் கடும் புகை பரவி வருகிறது. தொடக்கத்தில் குடோனுக்குள் மட்டும் பற்றிய தீயானது, பின்னர் குடோனை சுற்றி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள், மின் சாதன பொருட்கள், வயர்கள் உள்ளிட்டவை மீது மளமளவென பரவியது.

தனியார் கிடங்கானது காலையில் இருந்து பூட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும், உள்ளே யாரேனும் இருக்கிறார்களா என்ற விவரங்கள் தெரியவரவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படும் பணியில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு வருகிறார்கள். தீ மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. குடோனில் தொழிலாளர்கள் யாரேனும் சிக்கி உள்ளார்களா? என மீட்பு குழு தேடி வருகிறது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சென்னை மடிப்பாக்கத்தில் பழைய பொருட்கள் சேமிக்கும் கிடங்கில் திடீர் தீ விபத்து; தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Madipakkam, Chennai ,CHENNAI ,Ram Nagar, Madipakkam, Chennai ,Ram Nagar ,Madipakkam ,Sudden ,
× RELATED மடிப்பாக்கம் ராம் நகரில் பயங்கர தீ விபத்து